முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா இறப்பில் புதுவைக்கு 3-வது இடம்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : கொரோனா இறப்பில் புதுச்சேரி 3-வது இடத்தை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசின் சுகாதாரத்துறை நாடு முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் குறித்து நேற்று முன்தினம் ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டது. இதில் மக்கள் தொகையின் அடிப்படையில் இறப்பு விகிதம் கணக்கிடப்பட்டு மாநிலங்களை வரிசைபடுத்தப்பட்டுள்ளது. 

இதில் புதுவை 3-வது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் இதுவரை 965 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு 80 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இறப்பில் டெல்லி முதலிடத்தையும், கோவா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறிய மாநிலமான புதுவையில் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது.

தெருவுக்கு தலா 4 வீடுகளை சேர்ந்தோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரிப்பு, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு பீதியால் புதுவையில் பொதுமக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து