முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது : சோனியாவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருவதாக, அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ.க. தலைவர் நட்டா எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார்.

இது தொடர்பாக சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் ஜே.பி. நட்டா கூறியிருப்பதாவது, 

உங்களது தலைமையில், உங்கள் கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, மீண்டும் அதனையே அமல்படுத்த வேண்டும் எனக் கூறுவதை தவிர வேறு ஒன்றும் செய்வது கிடையாது.

இரண்டாவது அலை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைகளை புறக்கணித்து விட்டு, அது குறித்து எந்த தகவலும் வரவில்லை எனக் கூறி கேரளாவில் மிகப்பெரிய பேரணிகளை நடத்தி கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தீர்கள். போராட்டங்களை தூண்டி விட்ட பின்னர், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பேசுகிறீர்கள்.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ துவங்கிய பின்னர், வட இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமான கூட்டங்களில் உங்கள் கட்சி தலைவர்கள் காணப்பட்டனர். அங்கு அவர்கள் முகக்கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இரட்டை நிலை கடைபிடித்த ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும்.

கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமுடன் போரிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும். பொய்யாக பீதி ஏற்படுத்துவதையும், அரசியல் காரணங்களுக்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதை நிறுத்த வேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். கொரோனா விவகாரதத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தை குறை சொல்லி, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உருவான தடுப்பூசி, எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானது அல்ல.

அது நாட்டிற்கு சொந்தமானது. ஆனால் காங்கிரஸ் கட்சியால், தவறான அரசியலை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. பார்லிமென்டிற்கு புதிய கட்டிடம் கட்டுவதை எதிர்ப்பதற்காக அரசியலில் காங்கிரஸ் புது வழிகளை கையாண்டு வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து