முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்: கொரோனா நோயாளிகள் அவதி

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அடுத்து கொரோனா நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் பெரும் பாதிப்பையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 ஆயிரத்து 181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. 

இவர்களில் 85 ஆயிரத்து 631 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 72 ஆக உயர்ந்தது. இதில் 12 ஆயிரத்து 978 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அடுத்து கொரோனா நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் மொத்தம் உள்ள 480 படுக்கைகளில் 325 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. நேற்றிரவு ஆக்சிஜன் வசதியுள்ள 325 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. 

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நோயாளிகள் மருத்துவமனையின் வாயிலிலும் மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து