முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வந்து செல்லும் 126 விமானங்கள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் பயணிகள் பலர் கொரோனா காலத்தில் விமானங்களில் பயணிக்க விரும்பவில்லை. 

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் வரும் 24-ந் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.

உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் பயணிகள் பலர் கொரோனா காலத்தில் விமானங்களில் பயணிக்க விரும்பவில்லை.

இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் நேற்று உள்நாட்டு விமான சேவைகள் குறைந்துள்ளன.

சென்னையிலிருந்து 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் 2,400 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். அதைப்போல் சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்கள் 40 இயக்கப்பட்டு, அதில் 1,300 பேர் மட்டும் பயணிக்கின்றனர். நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மொத்தம் 78 விமானங்களில் 3,700 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 126 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து