முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி பாகுபாடின்றி எம்.எல்.ஏ.க்கள் பணியாற்ற வேண்டும்: எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

கட்சி பாகுபாடின்றி எம்.எல்.ஏ.க்கள் பணியாற்ற வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று முதல்வர்   ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்க கட்சிகளை கடந்து மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் நோய்தொற்றை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும். படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை நெருக்கடி இருந்தால் உடனே அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் இணைந்து நிற்போம். கட்சி பாகுபாடின்றி எம்.எல்.ஏ.க்கள் பணியாற்ற வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் ஒன்றுபட்டு செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து