முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு: 5 பேர் பணி இடைநீக்கம்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை ஆவின் நிறுவனத்தில் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருவது போக தயிர், வெண்ணை, நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனத்தின் உபபொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. பால் உபபொருட்கள் விற்பனையில் கிட்டத்தட்ட 13.71 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. 

இது குறித்த புகார்கள் ஆவின் நிர்வாக இயக்குனர் நந்தகோபாலிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் குழு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுரை ஆவின் நிறுவனத்தில் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து முதற்கட்ட விசாரணையின் முடிவில், உதவி மேலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து