முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் எதிரொலி: ஜப்பான் பயணத்தை ரத்து செய்தார்: ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      விளையாட்டு
Image Unavailable

கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் தனது ஜப்பான் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

டோக்கியோவில்... 

பல்வேறு நாடுகளில் மீண்டும் மீண்டும் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. உலகின் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வருகிற ஆகஸ்டு மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா...

ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மீண்டும் மீண்டும் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

டோக்கியோ பயணம் 

இதற்கிடையே ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதையடுத்து அங்கு சில நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ்பாச் ஜப்பானின் டோக்கியோவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்கு ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்.

ஜப்பான் பயணம் ரத்து 

இதற்கிடையே ஜப்பானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அவசர நிலை பிரகடனம்

இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் செய்கோ கூறும்போது, “டோக்கியோ உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வருகிற 31-ந்தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தி இருப்பதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் சுற்றுப்பயணம் நடைமுறைபபடுத்த முடியாமல் போய் விட்டது. விரைவில் அவரது சுற்றுப்பயணம் இருக்கும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து