முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் புவனேஷ்வர் இடம் பெறாததற்கு காரணம்?

புதன்கிழமை, 12 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெறாததற்கு காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

2018-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் விளையாடாத புவனேஷ்வர் குமார், ஐந்து நாட்கள் தாக்குப்பிடித்து விளையாடக் கூடிய தகுதி பெறவில்லை என பி.சி.சி.ஐ கருதுகிறது.

ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பவர்கள் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார். இவர்களில் புவனேஷ்வர் குமார் சிறந்த ஸ்விங் பந்து வீச்சாளர்கள். புதுப்பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்வதில் வல்லவர். இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற இடங்களில் ஸ்விங் கிங்-ஆக திகழக்ககூடியவர்.

கடைசி போட்டி...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோகன்னஸ்பார்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் கடைசியாக விளையாடினார். அதன்பின் ஐ.பி.எல் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

காயம் காரணமாக...

2020 ஐ.பி.எல் சீசனில் விளையாடும்போது காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் சையது முஷ்டாக் அலி டி20, விஜய் ஹசாரே டி20 கிரிக்கெட்டில் விளையாடி திறமையை நிரூபித்தார். இதன்காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தொடரில் இடம் பிடித்தார்.

இடம் இல்லை...

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் புவனேஷ்ரவர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.

உடற்தகுதி பெறவில்லை

பந்தை ஸ்விங் செய்வதில் சிறந்தவராக புவனேஷ்வருக்கு இடம் கிடைக்காதது ஆச்சர்யம் தான். ஆனால் ஐந்து போட்டிகளில் விளையாடும் அளவிற்கு இன்னும் அவர் உடற்தகுதி பெறவில்லை. காயத்திற்கு பிறகு அவர் முதல்-தர போட்டியில் விளையாடவில்லை.டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் (ஸ்பெல்) பந்து வீச வேண்டியிருக்கும். அதற்கு புவி இன்னும் தயாராக வில்லை என்பதால் சேர்க்கப்படவில்லை. 

இது ஒருபுறம் இருக்க இலங்கைக்கு எதிரான தொடரில் புவனேஷ் குமார் இடம்பெறுவார் என்றே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து