முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மூன்று முறை பரிசோதனை: பி.சி.சி.ஐ அறிவிப்பு

சனிக்கிழமை, 15 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பயணம்

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி உட்பட ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்லவுள்ளது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருந்தது.

பி.சி.சி.ஐ அறிவுறுத்தல்

இந்திய அணி ஜூன் 2-ம் தேதியன்று இங்கிலாந்துக்கு பயணம் செய்ய உள்ளது. அதற்கு முன்னதாக 8 நாட்கள் மும்பையில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் பபுளில் வைக்கப்பட உள்ளனர். அதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானால் அந்த வீரரை அணி நிர்வாகம் இங்கிலாந்து அழைத்து செல்லாது என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. அதனால் வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு  பி.சி.சி.ஐ அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி ஜூன் 2-ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இதுகுறித்து பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.,

3 முறை பரிசோதனை 

இந்திய வீரர்கள் மே 19-ம் தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவர். ஜூன் 2-ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இந்தியா-நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-ல் தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து