முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சி.எஸ்.கேவுக்குதான் சாம்பியன் பட்டம்: சுனில் கவாஸ்கர் உறுதி

சனிக்கிழமை, 15 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல் 2021 இப்போதைக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளில் சென்னைதான் சாம்பியன் அணியாக விளையாடியது, நடப்பு தொடரில் சாம்பியன் வெல்லும் அணி சி.எஸ்.கே தான் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு கொரோனா 

ஐ.பி.எல் 2021 வீரர்களுக்கான பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி கொரோனா உள்ளே நுழைய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை கொரோனா தொற்றியுள்ளது. இதனையடுத்து ஐ.பி.எல் 2021 இப்போதைக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளில் சென்னைதான் சாம்பியன் அணியாக விளையாடியது என்கிறார் சுனில் கவாஸ்கர்.

3 அணிகள் போட்டி

மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் ஐ.பி.எல் 2021 பாதியிலேயே நிறுத்தப்பட்டது. லீக் மட்டத்தில் டோனி தலைமை சென்னை, கோலி தலைமை ஆர்சிபி, ரிஷப் பந்த் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்தான் பிரமாதமாக ஆடின, இந்த 3 அணிகளும் கடும் போட்டியில் மாறி மாறி முதலிடம் பிடித்தன.

சி.எஸ்.கே டாப்...

இந்த 29 போட்டிகளிலும் சாம்பியன் அணியாக ஆடிய அணி எது என்று ஒரிஜினல் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு எழுதிய பத்தியில் அலசியுள்ளார்: மற்ற அணிகள் டாப் பார்மில் இருக்க கடந்த ஐ.பி.எல் போட்டித் தொடரில் மிகவும் ஏமாற்றம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐ.பி.எல் தொடரில் டாப் அணியாகத் திகழ்கிறது.

மாஸ்டர் ஸ்ட்ரோக்

இத்தனையாண்டு காலமாக சாம்பியன்கள் போல் ஆடியதை மீண்டும் கைவரப்பெற்றது. இந்த முறை அதன் ஆற்றல் புத்துணர்வு பெற்றது போல் இருந்தது. இத்தனைக்கும் அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை 3ம் நிலையில் களமிறக்கி ஆடவைத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்த இடது கை பேட்ஸ்மென் வெளுத்துக் கட்டினார்.

சாம் கரண் - ருதுராஜ்

சீரான முறையில் நன்றாக ஆடும் ஃபாப் டுபிளெசிஸ் அடித்து நொறுக்கும் பார்மில் இருந்தார். இவர்களோடு எதிர்கால இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்ந்து டாப் ஸ்டார்ட் கொடுத்தனர். சாம் கரண் ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம் கண்டு வருகிறார். இப்போது அவர் ஒரு முறையான ஆல்ரவுண்டராக மதிக்கப்பட வேண்டியவர். 

சென்னை சாம்பியன்...

சென்னை அணியின் இறுதி ஓவர் பவுலிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது, ஏனெனில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக 218 ரன்கள் எடுத்தும் போதாமல் தோற்றது. எனவே இதில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி விட்டால் ஐ.பி.எல் 2021 சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஆவதற்குத் தடையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து