முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யன் ரூ.1 லட்சம் நிதியுதவி

சனிக்கிழமை, 15 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்வர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த வகையில் அர்ஜூனா விருது சென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

___________

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

ஐ.பி.எல் தொடர் ரத்தானவுடன் வீடு திரும்பிய சாஹல் தன் பெற்றோருக்குக் கொரோனா தொற்று இருப்பதையும் தாயார் வீட்டிலும் தந்தை மருத்துவமனையிலும் சிகிச்சையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் சாஹல் மனதைத் தேற்றிக் கொண்டு கொரோனா உதவி கேட்டவருக்கு உதவி புரிந்து அசத்தியுள்ளார். 

பெங்களூருவில் கெட்டோ என்ற தன்னார்வ அமைப்பின் வலைத்தளத்தில் ஒரு நபர் தனது தோழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இத்தனை நாட்கள் அவருக்காக தான் செலவழித்ததாகவும் மேலும் ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது என்றும் யாரேனும் உதவினால் நல்லது என்றும் கேட்டிருந்தார். உடனே சாஹல் அந்த வலைத்தளத்துக்கு ரூ.2 லட்சம் அளித்து உதவி புரிந்தார். இதே கெட்டோவின் நிதிதிரட்டல் முயற்சிக்கு விராட் கோலி மேற்கொண்ட நடவடிக்கைக்கு சாஹல் 95,000 கொடுத்திருந்தார் சாஹல்.

___________

ஹர்திக் குறித்து சரன்தீப்சிங் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரன்தீப்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்காதது ஏன்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. முதுகுவலி காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு அவரால் வழக்கம் போல் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. 

ஒரு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா பந்து வீசவில்லை என்றால் அந்த பணியை மற்றவர்களால் செய்ய முடியும். பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன். ஷேவாக் இந்திய அணிக்காக எப்படி ஆடினாரோ அதே போன்று இவரால் ஆட முடியும். இளம் வீரரான அவரை இப்போதே ஓரங்கட்டக்கூடாது. தனது பேட்டிங்கில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளையும் சரி செய்துள்ளார். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

__________

அரைஇறுதிக்கு நடால் தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக சாம்பியன் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.  ரோமில் நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2- வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் முன்னணி ரபெல் நடால், ஜெர்மன் பிரபலம் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ்வை 6-க்கு 3, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ரெய்லி ஓபெல்கா, அர்ஜெண்டினா வீரர் ஃபெடெரிக்கோ டெல்போனிஸ்-ஐ 7-க்கு 5, 7-க்கு 6 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து