முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ்: இங்கிலாந்தில் எடுத்துக் கொள்ளும்' இந்திய அணி ' கிரிக்கெட் வீரர்கள்

புதன்கிழமை, 19 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை இங்கிலாந்தில் எடுத்துக் கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அனுமதி 

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 1-ம் தேதியில் இருந்து இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அதன்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

முதல் டோஸ்... 

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முதல் டோஸ் செலுத்திவிட்டனர். 2-வது டோஸ்க்கான காலஅவகாசம் இருக்கிறது. தற்போது இந்தியாவில் அனைத்து வீரர்கள் ஒன்றாக இணைந்து, தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இங்கி.க்கு எதிராக...

ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்து சென்று அந்நாட்டின் வழிகாட்டு நெறிமுறைப்படி தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் ஜூன் 18-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுகிறார்கள். ஆகஸ்ட் 4-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதில் விளையாடுகிறார்கள்.

இங்கிலாந்தில்...

சுமார் 3 மாத கால தொடராக இது அமையும். எனவே முதல் டோஸ் போட்டதில் இருந்து 2-வது டோஸ் போடுவதற்கான காலம் அந்த சமயத்தில்தான் வரும். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுகாதாரத்துறையில் 2-வது டோஸ் எடுத்துக் கொள்வார்கள் என தெரிகிறது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள் யாருக்காவது கொரோனா பாசிட்டிவ் இருந்தால், குறிப்பிட்ட நாளில்  இங்கிலாந்து செல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து