முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாடுகளுக்கு எதிரான டி-20 தொடர்: பொல்லார்டு தலைமையிலான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு

புதன்கிழமை, 19 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சாகுவராமஸ் : தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா எதிரான டி-20 தொடரில் பொல்லார்டு தலைமையிலான 18 பேர் கொண்ட மே.இ.தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார்.

தலா 5 போட்டிகள்... 

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி ஜூன் 26-ம் தேதி தொடங்குகிறது.

கிறிஸ் கெயிலுக்கு...

இந்த மூன்று தொடர்களிலும் விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். இதில் கிறிஸ் கெய்ல், அந்த்ரே ரஸல், சிம்ரன் ஹெட்மையர் அணியில் இடம் பிடித்துள்ளனர் பொல்லார்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் பூரன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் அணி வீரர்கள்:

1. பொல்லார்டு (கேப்டன்), 2 நிக்லோகஸ் பூரன் (துணைக் கேப்டன்), 3. ஆலன், 4. பிராவோ, 5. காட்ரெல், 6. பிடெல் எட்வர்ட்ஸ், 7. பிளெட்சர், 8. கிறிஸ் கெய்ல், 9. ஹெட்மையர், 10. ஹோல்டர், 11. அகியல் ஹொசைன், 12. எவின் லிவிஸ், 13. மெக்காய், 14. ரஸல், 15. லென்டில் சிம்மன்ஸ், 16. சின்கிளைர், 17. ஒசானே, 18. ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து