முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் 'ஆஷஸ்' தொடருக்கான அட்டவணை வெளியீடு

புதன்கிழமை, 19 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

டிராவில் முடிந்தது...

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பம்சம் பெற்றது இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர். இந்த டெஸ்ட் ஒருமுறை இங்கிலாந்திலும், அடுத்த முறை ஆஸ்திரேலியாவிலும் நடைபெறும். கடந்த முறை இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடர் டிராவில் முடிந்தது.

91 டெஸ்டுகள் டிரா... 

இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடரில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

ஆஸ்திரேலியாவில்... 

இந்த நிலையில் 2021-2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் நடக்கும் 2-வது டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

அட்டவணை பின்வருமாறு:-

டெஸ்ட் தேதி மைதானம்

முதல் டெஸ்ட் டிசம்பர் 8-12 பிரிஸ்பேன்

2-வது டெஸ்ட் டிசம்பர் 16-20 அடிலெய்டு

3-வது டெஸ்ட் டிசம்பர் 26-30 மெல்போர்ன்

4-வது டெஸ்ட் ஜனவரி் 5-9 சிட்னி

5-வது டெஸ்ட் ஜனவரி 14-18 பெர்த்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து