முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தினருடன் சாஹா

புதன்கிழமை, 19 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார்.  ஐ.பி.எல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார் அவர். பயோ பபுளில் இருந்த வீரர்களில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளான வீரர்களில் சாஹாவும் ஒருவர். அதையடுத்து அவர் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். 

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்போது மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாஹா. அதனை உற்சாகத்துடன் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதையடுத்து தற்போது கொல்கத்தாவில் உள்ள குடும்பத்தினருடன் பொழுதை இனிதாக செலவழித்து வருகிறார். வரும் ஜூன் 2-ம் தேதியன்று மும்பையிலிருந்து இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ளது. அதற்கு முன்னதாக குடும்பத்தினரை சந்திக்க சாஹா விரும்பியதால் அவரது விருப்பத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிகிறது. 

___________

மீண்ட மிஸ்ரா, கிருஷ்ணா

ஐ.பி.எல். போட்டியின் போது கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. மே 4 அன்று சஹா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

அந்த நாளன்றுதான் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே 8 அன்று பிரசித் கிருஷ்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இம்மூவரும் கொரோனா பாதிப்பிலிருந்து தற்போது மீண்டுள்ளார்கள். சஹாவும் மிஸ்ராவும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்கள். பிரசித் கிருஷ்ணாவும் கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டதாக அறியப்படுகிறது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சஹாவும் பிரசித் கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

__________

டி வில்லியர்ஸ் ஏற்கவில்லை

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  நடைபெற்று வந்தன. ஆனால் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் டி வில்லியர்ஸின் முடிவு பற்றி தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் தெரிவிக்கையில்., இந்த முடிவை எடுப்பதற்கான காரணங்கள் டி வில்லியர்ஸிடம் இருந்தன. அதை நான் மதிக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் இப்போதும் அவர்தான் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். ஆனால் எங்களுடைய அமைப்பில் ஏற்கெனவே உள்ள வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி அணியில் இடம்பெறுவது பற்றிய தன்னுடைய வேதனையை குறிப்பால் உணர்த்தினார். இதை அவர் ஏற்கவில்லை. அந்த உணர்வுகளை நான் புரிந்துகொண்டேன் என்றார்.

__________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து