முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் மேலும் ஒரு கீப்பராக கே.எஸ்.பரத் சேர்ப்பு

வியாழக்கிழமை, 20 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மேலும் ஒரு விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் விருதிமான் சகாவுக்கு மாற்று வீரராக செயல்படவுள்ளார்.

5 போட்டிகள்...

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

கொரோனா தொற்று...

இந்த ஆறு போட்டிகளுக்கான இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக விருத்திமான் சகா இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியின்போது சகாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போதுதான் அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். 

மாற்று விக்கெட் கீப்பர்...

இந்திய அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் ஒருவேளை சகா தயாராக முடியவில்லை என்றால், அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 27 வயதாகும் கே.எஸ். பாரத் ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். உள்ளூர் தொடரான முதல்-தர கிரிக்கெட்டில் அதிக வருடம் விளையாடிய அனுபவம் பெற்றவர். இதுவரை 78 போட்டிகளில் விளையாடி 4283 ரன்க்ள அடித்துள்ளார். 123 இன்னிங்சில் 9 சதங்கள், 23 அரைசதங்கள் அடித்துள்ளார். சராசரி 37.24 ஆகும்.

முச்சதம் அடித்த வீரர்... 

கேரளாவிற்கு எதிராக 2012-13-ல் தனது 19 வயதில் கேரளாவிற்கு எதிராக முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2015-ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து