முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: விமர்சித்த சர்வதேச பத்திரிகைகளுக்கு ஆஸி. வீரர் மேத்யூ ஹைடன் கண்டனம்

வியாழக்கிழமை, 20 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : கொரோனா விவகாரத்தில்  இந்திய அரசை விமர்சனம் செய்த சர்வதேச பத்திரிகைகளுக்கு மேத்யூ ஹைடன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலையில் சிக்கித்தவித்து வரும் இந்தியாவின் இந்த துயர நிலைக்கு காரணம் இந்திய அரசின் மெத்தனபோக்குதான் என சர்வதேச பத்திரிகைகள் விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்தன. அதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை ஐ.பி.எல். அணிக்காக விளையாடியவருமான மேத்யூ ஹைடன் தெரிவிக்கையில்.,

எளிதானது இல்லை

கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை அறியாமல் சில சர்வதேச ஊடகங்கள் அவர்கள் விருப்பம் போல் விமர்சித்து வருகின்றன. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதில் நிறைய சவால்கள் உள்ளன. 

மரியாதை அதிகம் 

இந்தியா முழுவதும் நான் பயணித்திருக்கிறேன். குறிப்பாக தமிழகத்தை எனது ஆன்மிக இல்லமாகவே நான் கருதுகிறேன். இவ்வளவு பெரிய நாட்டை வழிநடத்தி வரும் தலைவர்கள் மீது எப்போதுமே எனக்கு மரியாதை அதிகம் உண்டு. 

மனம் கனக்கிறது...

இந்தியாவில் நான் செல்லும் இடமெல்லாம் அங்குள்ள மக்கள் என் மீது அன்பு செலுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்திய மக்கள் தற்போது சிக்கியுள்ள இந்த அவல நிலையை கண்டு எனது மனம் கனக்கிறது” என ஹைடன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து