முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்: முன்னாள் வீரர் மாண்டி கணிப்பு

சனிக்கிழமை, 22 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள் அமைந்தால் இந்திய அணி 5-0 என இங்கிலாந்தை வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனீசர் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது.  இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனீசர் கூறியதாவது., ஆகஸ்ட் மாதம் ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்தால் இந்திய அணி 5-0 என வெல்ல வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டுகளில் ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஆடுகளங்கள் காய்ந்த நிலையில் இருக்கும். அது இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து