முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய பேட்ஸ்மேன்களுகாக ரவி சாஸ்திரியின் 3 வியூகங்கள்

சனிக்கிழமை, 22 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இங்கிலாந்து பயணத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சதங்களை விளாச பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வகுத்துள்ள 3 புதிய பயிற்சி யுக்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 2-ம் தேதி அன்று இங்கிலாந்துக்கு பயணிக்கிறது. நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் நீண்ட நெடிய டெஸ்ட் தொடரில் விளையாடவும் உள்ளது இந்தியா. இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சதங்களை விளாசி தள்ள மூன்று புதிய பயிற்சி வியூகங்களை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சதம் விளாசுவது அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு இந்த வியூகம் அமைத்துள்ளாராம் ரவி சாஸ்திரி. ஏனெனில் ரோகித் ஷர்மா மற்றும் பண்டை தவிர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி (12 இன்னிங்ஸ்), புஜாரா (28 இன்னிங்ஸ்), ரஹானே (11 இன்னிங்ஸ்) மாதிரியான பேட்ஸ்மேன்கள் கடைசியாக விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்யாமல் உள்ளனர். இளம் வீரர் சுப்மன் கில் 13 இன்னிங்ஸ் விளையாடி அதில் ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் உள்ளார்.

இந்நிலையில் அதற்கு தீர்வு காணவே ரவி சாஸ்திரி இந்த யோசனையை முன்னெடுத்துள்ளாராம். அதே நேரத்தில் இந்த வியூகம் இங்கிலாந்து ஆடுகளங்களில் வீரர்கள் ரன் குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலைபயிற்சியில் தானியங்கு ரோபா ஆர்ம் வீசும் பந்தை எதிர்கொள்ளும் போது ஆடுகளத்தின் நீளத்தை 22 யார்டுகளிலிருந்து 16 என குறைக்கபட உள்ளதாம். இதன் மூலம் வேகமாக வரும் டெலிவரியை ஒரு நொடி முன்கூட்டியே பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வார்களாம். அதனால் பந்தை ஈஸியாக ஹேண்டில் செய்ய உதவுமாம். 

ஷைன் செய்யப்பட்ட பந்துகளை வலைப்பயிற்சியில் பயன்படுத்தி ஹெவி ஆக்குவது. அதன் மூலம் பந்தை எப்போது விட வேண்டும், எப்போது அடிக்க வேண்டும் என்ற கலையில் கைதேருவது. அனைத்து பந்துகளையும் ஆடாமல் எதை விட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது. இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில் விளையாட முடியுமாம்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து