முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டி குறித்து யுவ்ராஜ்

சனிக்கிழமை, 22 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

எந்த வீரர் அதிக டெஸ்ட் ஆட்டங்களை விளையாடியிருக்க வேண்டும் என்கிற கேள்வி யுவ்ராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதனுடன் யுவ்ராஜ் சிங்கின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளித்த யுவ்ராஜ் சிங் கூறியதாவது.,

அடுத்த வாழ்க்கையில் அதிக டெஸ்டுகளில் விளையாட விரும்புகிறேன், 7 வருடங்களுக்கு 12-வது வீரராக இல்லாத பட்சத்தில் என்று கூறியுள்ளார்.  40 டெஸ்டுகளில் விளையாடியுள்ள யுவ்ராஜ் சிங், 3 சதங்களுடன் 1900 ரன்கள் எடுத்துள்ளார்.

__________

டோனி தான் காரணம் - தீபக் சாஹர்

“டோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது பெருங்கனவு. அவரது தலைமையின் கீழ் விளையாடி நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எனது ஆட்டம் அடுத்த படிக்கு முன்னேற அவரது வழிகாட்டுதல் பெரிதும் உதவின. என்னை எப்போதுமே சப்போர்ட் செய்வார். பொறுப்புகளை எப்படி சுமப்பது என்பதை சொல்லிக் கொடுத்தவர். 

எங்கள் சென்னை அணியில் என்னைத் தவிர யாருமே பவர் ப்ளேயில் மூன்று ஓவர்கள் வீசியதில்லை. அதற்கு காரணம் டோனி தான். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ரன்கள் விட்டுக் கொடுப்பதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் நான் தேர்ச்சி பெற்று வருகிறேன். குறிப்பாக டி20 போட்டிகளில் அதை என்னால் கச்சிதமாக செய்ய முடிகிறது என நம்புகிறேன்” என தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். 

_______________

45 வயதில் 190 ரன்கள் விளாசல்

இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியான கென்ட் அணியைச் சேர்ந்த 45 வயது ஆல்ரவுண்டர் டேரன் ஸ்டீவன்ஸ் 149 பந்துகளில் 190 ரன்களை விளாசித்தள்ளினார். இதில் 15 பவுண்டரிகள் 15 சிக்சர்களை புரட்டி எடுத்தார் டேரன் ஸ்டீவன்ஸ்.

கிளாமர்கன் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் தனது வயதையும் மறந்து விளாசிய டேரன் ஸ்டீவன்ஸ் தன் அணியை 128/8 என்ற நிலையிலிருந்து 307 ரன்களுக்குக் கொண்டு சென்றார். இதில் 166 ரன்களை கூட்டணி சேர்ந்து எடுத்தாலும் இவர் மட்டுமே 160 ரன்களை இதில் அடித்தது கவுண்ட்டி கிரிக்கெட் வரலாற்றுச் சாதனையாகும்.

_____________

உமேஷ் யாதவ் உற்சாகம்

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளார். இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறியதாவது., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குச் சமமானது. இது பற்றி இஷாந்த், ரகானே கூறியது மிகச்சரி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையக் கைப்பற்றுவது உலகக்கோப்பையை வெல்வதற்குச் சமமானது.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரர்களுக்கு இது நிச்சயம் உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்றதுதான். உலகக்கோப்பையில் லீக், நாக்-அவுட் சுற்றுக்கள் என்று ஆடி இறுதிக்குள் நுழையவோம், அதேபோல்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதும் உலகின் டாப் அணிகளை வீழ்த்துவதன் மூலமே முடியும் என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

___________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து