முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023-ம் ஆண்டு நடைபெறும்

திங்கட்கிழமை, 24 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : அடுத்த சில மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். 

2 வருடத்திற்கு ஒருமுறை...

ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். உலகக்கோப்பையை கருத்தில் இருந்து அதற்கு ஏற்றபடி டி-20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். இந்த வருடம் டி20 தொடர் நடத்தப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் கடந்த ஆண்டு போதுமான அளவிற்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

தயார் செய்வதில் சிக்கல் 

இதனால் இந்த வருடம் அதிகமான போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளன. மேலும், கொரோனா தொற்றால் அடிக்கடி போட்டி அட்டவணையை மாற்றக்கூடிய நிலையும் ஏற்படுகிறது. ஆகவே,ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மீண்டும் பரவல்...

கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 2023-க்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022-ல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வரும் 2023க்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தியா சாம்பியன்... 

கடைசியாக 2018-ல் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தொடர் நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து