முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளை அதிகம் வாங்கிய கவுதம் காம்பீர் மீது விசாரணை

திங்கட்கிழமை, 24 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளை விநியோகம் செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

2 பேர் மீது வழக்கு 

கொரோனா தொற்று காலத்தில் ஃபேபிஃப்ளூ மாத்திரைகளை பதுக்கியதற்காக காம்பீர் மற்றும் 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது காம்பீர் நல்லெண்ணத்தில் இதை செய்திருக்கிறார் என்று கூறினாலும், பெருந்தொற்று காலத்தில் பெரிய அளவில் இந்த மாத்திரைகளைக் கொள்முதல் செய்வது தவறு என்று கோர்ட் கண்டித்தது.

மொத்தக் கொள்முதல்... 

“என்ன விசாரணை நடைபெற்றிருந்தாலும் மருந்துக் கட்டுப்பாட்டுநர் இதனை மீண்டும் சீரியஸாக அணுக வேண்டும். அவர் ஒரு தேசிய அணி கிரிக்கெட் வீரர், அவரது நோக்கங்கள் நிச்சயம் நல்லதுக்காகத்தான் என்று உறுதியாக நம்புகிறோம், ஆனால் அதற்காக மொத்தக் கொள்முதல் செய்வது தவறுதான்” என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணை நடத்த...

டாக்டர் கார்க் என்பவரின் பரிந்துரைச் சீட்டு மூலம் 2628 ஸ்ட்ரிப்கள் ஃபேபிஃப்ளூ மாத்திரைகளை வாங்கியுள்ளார் காம்பீர். எனவே ஒரு பிரிஸ்கிரிப்ஷனுக்கு எப்படி இவ்வளவு மாத்திரைகளைக் கொடுக்க முடியும், என்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஒரு வாரத்துக்குள்... 

மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு வாரத்துக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது எப்படி இந்தச் சங்கிலித் தொடர் உருவானது, யார் மீது நடவடிக்கை எடுப்பது? மருத்துவர் மீதா? காம்பீர் மீதா, அல்லது ஒரு பிரிஸ்கிரிப்ஷனுக்கு இத்தனை கொரோனா சிகிச்சை மாத்திரைகளை வழங்கிய விற்பனையாளரையா? என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எதிர்கட்சியினர்...

 

டெல்லியில் கேஜ்ரிவால் தலைமை ஆம் ஆத்மி ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வரும் கவுதம் காம்பீர் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யலாமா என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து