முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி. வீரர் அஜாஸ் ஆர்வம்

திங்கட்கிழமை, 24 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வரும் ஜூஸ் 18 அன்று நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி விளையாட உள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள இந்தியாவில் பிறந்தவரான அஜாஸ் பட்டேல் தெரிவிக்கையில்., 

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடுவது எண்ணி நான் மெய் சிலிர்க்கிறேன். நியூசிலாந்தில் குடியேறிய நான் அங்கிருந்துதான் எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினேன். இப்போது கிரிக்கெட்டின் தாய் நாடான இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஆகச்சிறந்த நாடான இந்தியாவுடன், அதுவும் நான் பிறந்த நாட்டுடன், எனது தாய் நாடான நியூசிலாந்துக்கு அணிக்காக விளையாடுவது அற்புதமான அனுபவம்” என அவர் தெரிவித்துள்ளார்.

_____________

ஷூப்மான் கில் யோசனை

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் என ஆறு போட்டிகளில் விளையாடுகிறது. இந்தநிலையில் ஷூப்மான கில் இங்கிலாந்தில் விளையாடுவது குறித்து கூறுகையில் ‘‘ஒரு தொடக்க வீரராக, இங்கிலாந்தில் மட்டுமல்ல எங்கு விளையாடினாலும், ஒருநாளில் விளையாடப்படும் மூன்று செசன்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். 

ஒவ்வொரு செசன்களிலும் விளையாடுவது முக்கியமானது. இங்கிலாந்தில் பார்த்தீர்கள் என்றால், எப்போதெல்லாம் மேகமூட்டமாக இருக்குமோ, அப்போதெல்லாம் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். சூரியன் வெளியே வந்து வெயில் அடிக்கும்போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். தொடக்க வீரர் இந்த சூழ்நிலையை மதிப்பிடுவது அவசியமானது. கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்றார்.

___________

இந்திய அணிக்கே சாதகம்

ஐபிஎல் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிக உதவியாக இருக்கும் என்று நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதால் இந்திய வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்களுக்கு உதவியாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியை பொறுத்தவரை இந்தியாவை விட நியூசிலாந்துக்கு சற்று வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இங்குள்ள ஆடுகளத்தில் உலக டெஸ்ட்டுக்கு முன்பு நாங்கள் 2 டெஸ்டில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

______________

நியூசி., பயிற்சியாளர் எச்சரிக்கை

டெலிகிராப் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் ஜார்ஜென்சன் தெரிவிக்கையில்., ரிஷப் பன்ட் ஒரு ஆபத்தான ஆட்டக்காரர். எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன் படைத்த பேட்ஸ்மேன். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ரிஷப் பன்ட்டின் விக்கெட் நியூசிலாந்து பவுலர்களுக்கு முக்கியமானது" என்றார்.

மேலும் பேசிய அவர் "நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீச வேண்டும். ரிஷப் பன்ட் விரைவாக ரன்களை சேர்ப்பதை தடுக்க வேண்டும். ஆனால் அது கடினமான காரியம். அதேவேளையில் இந்தியாவின் பவுலிங்கும் வலுவானதாகவே இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஷர்துல், சிராஜ் ஆகியோர் ஏற்கெனவே நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எனவே இந்தப் போட்டி கடினமானதாகவே இருக்கும்" என்றார் ஷேன் ஜார்ஜென்சன்.

_____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து