முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு

வியாழக்கிழமை, 27 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 298 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 093 ஆக உயர்வடைந்து உள்ளது.  கொரோனா பாதிப்பால் நாட்டில் 3,847 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 951 ஆக உயர்வடைந்து உள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 24,19,907 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியே 26 லட்சத்து 95 ஆயிரத்து 874 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து