முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு அப்பால் காத்திருக்கும் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை: நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 28 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர்களுக்கு அப்பால் காத்திருக்கும் வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்து உள்ளது.

சுங்கச்சாவடியை ஒரு வாகனம் 10 விநாடிக்குள் கடக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், சில நேரங்களில், அதிக வாகனங்கள் வருவதால், தாமதம் ஏற்படுகிறது. 

இதற்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தாமதங்களை தவிர்க்கவும், சுங்கச்சாவடிகள் செயல்திறனை அதிகரிக்கவும் இனி, 100 மீட்டர்களுக்கு அப்பால் வாகனங்கள் காத்திருக்க நேரிடுமானால் அந்த வாகனங்கள் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.

சுங்கச்சாவடிகளின் இரு புறமும், 100 மீ., தூரத்தில் மஞ்சள் கோடு வரையப்படும். இந்த மஞ்சள் கோட்டிற்கு பின்னால் வாகனங்கள் காத்திருக்க நேரிடும் வாகனங்கள், (100 மீ., தூரத்தை தாண்டி வரிசையில் நிற்பவை) சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து