முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி மருத்துவர்களின் சம்பளம் 15 சதவீதம் உயர்வு: தெலுங்கானா அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 28 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் பணி புறக்கணிப்பின் தொடர்ச்சியாக பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில் மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மாநிலத்தின் மூத்த மருத்துவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து இளநிலை மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். இதன்படி, ஐ.சி.யூ. மற்றும் அவசரகால பிரிவுகளுக்கான சிகிச்சை தவிர்த்து கொரோனா தொடர்புடைய அனைத்து பணிகளையும் கடந்த 26-ம் தேதி முதல் புறக்கணிக்க முடிவானது. இதனால், கொரோனா நோயாளிகளின் நிலை ஆபத்தில் தள்ளப்பட்டது.  

இந்நிலையில், பணி புறக்கணிப்பின் தொடர்ச்சியாக, பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஐதராபாத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் சார்பில், மூத்த பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகையை மாதம் ஒன்றிற்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ. 80 ஆயிரத்து 500 ஆக, 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தி வழங்குவதற்கான ஒப்புதல் கோரப்பட்டது. இதனை கவனமுடன் ஆய்வு செய்த பின்னர், மூத்த பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகை மாதம் ஒன்றிற்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரத்து 500 ஆக அரசு உயர்த்தி வழங்க இருக்கிறது.  இந்த உயர்வு 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து