முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

' டெஸ்ட் - ஒருநாள் ' கிரிக்கெட் அணிக்கு தனிதனி கேப்டன்கள் : முன்னாள் தேர்வாளர் கிரண் மோரே தகவல்

சனிக்கிழமை, 29 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

ரோகித் - கோலி...

இது குறித்து இந்தியா டிவி-க்கு பேட்டியளித்த அவர் " இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்று முடித்த பிறகு, ஒருநாள், டி-20 அணிகளுக்கு ஒரு கேப்டனையும், டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனையும் நியமிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒருநாள், டி-20க்கு ரோஹித் ஷர்மாவும், டெஸ்ட் அணிக்கு விராட் கோலியும் நியமிக்கப்படலாம்" என்றார் அவர்.

பாதிக்க வாய்ப்பு

மேலும் பேசிய அவர் "இந்திய அணிக்கும் இரண்டு கேப்டன்களை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருவதால் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல் எனக்குக் கிடைத்துள்ளது" என்றார்.

பங்கேற்கவில்லை... 

தொடர்ந்து பேசிய கிரண் மோரே "கொரோனா காரணமாக நமது அணி அதிகமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவில்லை. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால், இரண்டு கேப்டன்கள் அவசியமும் கூட. கோலியின் பணிச்சுமையை குறைக்க இது சிறந்த வழி" என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து