முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 கிரிக்கெட்டில் டோனிதான் சிறந்த கேப்டன்: மைக்கல் வாகன்

சனிக்கிழமை, 29 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் கோலி சிறந்த கேப்டனாக இருக்கலாம், ஆனால் டி-20களில் டோனிதான் சிறந்த கேப்டன் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்.

டெஸ்ட் போட்டியில்...

இது குறித்து பேசிய மைக்கல் வாகன் "டோனிதான் சிறந்த டி20 கேப்டன். அவர் இந்திய அணிக்காக கொண்டு வந்ததெல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால் டி20, ஒருநாள் போட்டிகளில் டோனியே சிறந்தவர்." என்றார்.

தொடரை கைப்பற்றும்...

இங்கிலாந்து - இந்தியா இடையே நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டி குறித்து பேசிய அவர் "இங்கிலாந்து தொடரை கைப்பற்றும். ஒவ்வொரு முறை இங்கிலாந்து இந்தியாவுக்கு செல்லும்போதும் மோசமாக தோற்கும். அதேபோல இந்தியாவுக்கும் இங்கிலாந்து வரும்போது நடக்கும். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் டியூக் பந்தில் தோற்கடிப்பது கடினம்" என தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் இறுதி...

இங்கிலாந்துக்கு எதிரான 5போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணி சவுத்தாம்ப்டனில் நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜூன் 18 முதல் 22 தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து