முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கியமான போட்டி: நீல் வாக்னர்

ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் நீல் வாக்னர், இந்தியாவுக்கு எதிராக ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை இறுதி போட்டியை போன்றது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீல் வாக்னர் கூறுகையில் ‘‘இது எனக்கு உலகக்கோப்பை இறுதிப் போன்று போன்றது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை நான் ஒருநாள் அல்லது டி20 கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம். இனிமேல் ஒயிட் பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.  உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்று, முழு உத்வேகத்துடன் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம். டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. உலகின் பல்வேறு பகுதியில் விளையாடுவது எளிதானது அல்ல. மிகவும் சவாலானது. கடினமான சூழ்நிலையில் உங்களுடைய திறமை மற்றும் சிறந்த வீரருக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற முடியும்’’ என்றார்.

_______________

இதுதான் எங்கள் வழி - டீன் எல்கர்

தென்ஆப்பிரிக்காவிற்கான வழியில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டியது அவசியம் புதுக்கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘தற்போது நாங்கள் புது அத்தியாயம். நாங்கள் அதிகமான போட்டியில், சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். கடந்த காலகட்டத்தில் நாங்கள் மிகவும் சீராக இருக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். எங்களுடைய உச்சக்கட்ட திறமை இன்று வெளிப்படவில்லை. வழக்கமான கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகமான தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எங்களுடைய பாணியில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம்.

நாங்கள் எப்போதும் சிறந்த பேட்டிங் ஆர்டரை வைத்துள்ளோம். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களையும் வைத்துள்ளோம். இதுதான் தென்ஆப்பிரிக்கா வழி. மிகப்பெரிய சதம், ஐந்து விக்கெட் வீழ்த்தி, பழைய நிலைக்கு திரும்புவது அவசியம். கடந்த சில வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ, அதேபோல் மீண்டும் முன்னேற்ற அடைய முடியும் என்பதுபோல் உணர்கிறேன். இதுதான் என்னுடைய மிகப்பெரிய இலக்கு. இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.

______________

செல்சியா 2-வது முறை சாம்பியன்

2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தில் உள்ள செல்சியா, மான்செஸ்டர் சிட்டி அணிகள் தகுதி பெற்று இருந்தன. செல்சியா அணி ரியல் மாட்ரீட் அணியையும், மான்செஸ்டர் சிட்டி பி.எஸ். ஜி. அணியையும் தோற்கடித்து இருந்தன. செல்சியா-மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள போர்ட்டோ நகரில் நடந்தது. 

இதில் செல்சியா 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு அந்த அணி வெற்றிபெற்று இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் செல்சியா 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்றது.

______________

சி.பி.எல்.லில் ஷாகிப் ஹசன் இல்லை

வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் தொடரை புறக்கணித்து விட்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினார். வங்காளதேச கிரிக்கெட் போர்டும் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் போட்டி நடைபெறுகிறது. ஜமைக்கா தல்லாவாஸ் அணி ஷாகிப் அல் ஹசனை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியா அணி வங்காளதேசம் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. மூன்று நட்சத்திர அணிகளுக்கு எதிராக வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் விரும்புகிறது. இதனால்  ஷாகிப் அல் ஹசனுக்கு கரீபியர் பிரிமீயர் லீக்கில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

______________

இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு 

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன் 18 - 22) மோதுகின்றன. இதையொட்டி மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் வருகிற 2-ம் தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு மறுநாள் இங்கிலாந்தை அடைகிறார்கள். வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

அங்கு சென்றதும் இந்திய வீரர்கள் நேரடியாக சவுத்தம்டன் மைதான பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்துலை தொடங்குவார்கள். தனிமைப்படுத்தலின் போதும் முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிமைகாலம் எத்தனை நாட்கள் என்ற விவரத்தை ஐ.சி.சி. குறிப்பிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து