முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; வரும் ஜூன் 3ஆம் தேதிக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து எனவும் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து தெரிந்தபின்னர், பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் எனத் தகவல் வெளியானது. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்குகள் விடுமுறை கால சிறப்பு அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அடுத்த 2 நாள்களுக்குள் சி.பி.எஸ்.இ.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

அதன்படி, வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கொள்கை ரீதியான முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து