முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1274 டேங்கர்களில் 21,392 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வினியோகம் : இந்திய ரயில்வே தகவல்

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய ரயில்வே பல மாநிலங்களுக்கு இதுவரை 1274க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 21,392 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது. 

தற்போதுவரை மராட்டியத்திற்கு 614, உத்தரப்பிரதேசத்துக்கு 3797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, டெல்லிக்கு 5476, அரியாணாவுக்கு 2023, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 2115, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 1808, ஆந்திராவுக்கு 1738, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 380, தெலங்கானாவுக்கு 1858, ஜார்கண்ட்டுக்கு, 38, அசாமுக்கு 240 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிகப்பட்டுள்ளன. 

இதுவரை 313 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தற்போது 5 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 23 டேங்கர்களில் 406 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் பல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து