முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் 2 நாளில் கையிருப்பு தடுப்பூசிகள் தீர்ந்து விடும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திங்கட்கிழமை, 31 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் கையிருப்பு தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கொரோனா மையங்கள் மற்றும் தடுப்புப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுவரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் நிருபர்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனா தடுப்புப் பணிகள், படுக்கை வசதிகள், தடுப்பூசிகள் குறித்த விவரங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். 

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தின் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் காலியாகிவிடும். 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தரவேண்டியுள்ளது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகிவிட்டது. தற்போது கையிருப்பு இல்லை என்றும், நாளை (இன்று) வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

மேலும், இறப்பு எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, இறப்பு எண்ணிக்கையை குறைக்கவேண்டிய அவசியம் தமிழகத்திற்கு இல்லை என்று பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து