முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி: சுவரேவ், சிட்சிபாஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

திங்கட்கிழமை, 31 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரீஸ் : கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 6-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி ) சக நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேயை எதிர்கொண்டார்.

இதில் சுவரேவ் 3-6, 3-6, 6-2, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 49 நிமிடங்கள் தேவைப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் 5-வது வரிசையில் உள்ள ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் சிட்சிபாஸ் 7-6 (8-6), 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் 16-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவ் (பல்கேரியா) நிஷிகோரி (ஜப்பான்) 11-வது நிலை வீரரான அகுக் (ஸ்பெயின்), பேபியோ பாக்னி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

உலகில் 4-ம் நிலை வீரரும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

ஸ்பெயினை சேர்ந்த பேப்லோ 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொம்னிக்தீம்மை தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 11-வது இடத்தில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவா (செக் குடியரசு) 6-7 (3-7), 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தை சேர்ந்த கிரிட்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனையான சபலென்கா, 15-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), 23-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து