முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. குழு விதிமுறைகளை மற்ற மாநிலங்கள் போல தமிழகமும் ஏற்க வேண்டும்: பாரதிய ஜனதா

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஜி.எஸ்.டி. குழு விதிமுறைகளை மற்ற மாநிலங்கள் போல தமிழகமும் ஏற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தமிழக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கொரோனா மீட்பு பொருட்களுக்கான வரிவிலக்கு மற்றும் சலுகைகளுக்கான ஜி.எஸ்.டி. குழுவில் தமிழகம் இடம்பெறாதது குறித்து சிலர் விமர்சிப்பது வியப்பாக இருக்கிறது. இந்த குழுக்களுக்கு என விதிமுறை உண்டு. ஒவ்வொரு குழுக்களிலும் அனைத்து மாநிலங்களும் இடம்பெற முடியாது. 

இந்த குழுவில் மேகாலயா, குஜராத், மராட்டியம், கோவா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் தாங்களும் இடம்பெற வேண்டுமென மற்ற மாநிலங்கள் அடம்பிடிக்க முடியுமா? 

கடந்த 24-ந்தேதி சூதாட்ட விடுதிகள், ஆன்-லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயங்கள் குறித்த குழுவில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. தமிழக பிரதிநிதியாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார். 7 மாநிலங்கள் நியமிக்கப்பட்ட குழுவில் மற்ற மாநிலங்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்று அவர் கேட்டாரா? தமிழகம் இடம்பெற முடியாது என்று மறுத்தாரா? ஐ.ஜி.எஸ்.டி. குழுவில் கூட தமிழகம் உள்ளது. 

அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட விதிமுறைகளை ஏற்று ஒத்துழைப்பு அளிப்பதே மாநில நலனுக்கும், நாட்டு நலனுக்கும் சிறப்பளிக்கும். அதைவிடுத்து தன் மாநிலத்தை சேர்க்கவில்லை என்று மலிவு அரசியல் செய்வது சிறுபிள்ளைத்தனமே” என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து