முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வெளியே சென்று பணியாற்றலாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகர்கோவில் : கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வெளியே சென்று பணியாற்றலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, குடிநீர் தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. காய்கறி வண்டிகள் மூலம் தெருக்களில் காய்கறி வியாபாரம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி. வசதியை தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தடையின்றி வழங்குவதற்காக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின், அதற்கான துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதனை தொடர்ந்து நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, 

இன்று(நேற்று)முதல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத் தொடர்பு பணியாளர்கள் வெளியே சென்று பணியாற்றலாம். பணி தொடர்பாக மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் அடையாள அட்டையை காண்பித்து கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத் தொடர்பு பணியாளர்கள் தங்கள் பணியை மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து