முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இறுதிப்போட்டி 3 போட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும்: ரவி சாஸ்திரி பேட்டி

வியாழக்கிழமை, 3 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கடந்த 2019-ல் இருந்து 2021 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 18-ந்தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. 

இதற்கான இந்திய அணி நேற்றிரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. புறப்படுவதற்கு முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை 3 ஆட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும். ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல. வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினால், இறுதிப்போட்டியை 3 ஆட்டங்கள் கொண்டதாக நடத்துவதே சிறந்தது. 

தற்போது முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இது மிகப்பெரிய போட்டியாக இருக்கப்போகிறது. டெஸ்ட் கிரிக்கெட்தான் உங்களது உண்மையான திறமையை சோதிக்கும் ஒன்றாக இருக்கும். இது ஒன்றும் மூன்று அல்லது மூன்றரை மாதங்களில் நடந்து முடிந்துவிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. 

இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து