முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: டேவன் கான்வே அசத்தல் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது நியூசிலாந்து

வியாழக்கிழமை, 3 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேட்பன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே அறிமுகம் ஆனார். இங்கிலாந்து அணியில் ராபின்சன், இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேஸ், ஒல்லி ராபின்சன் ஆகியோர் அறிமுகம் ஆகினர். 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம் மற்றும் டேவன் கான்வே ஆகியோர் களமிறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 23 ரன்கள் எடுத்திருந்த டாம் லாதம் இங்கிலாந்து வீரர் ராபின்சன் பந்து வீச்சில் வெளியேறினார். 

அடுத்துவந்த கேப்டன் வில்லியம்சன் 13 ரன்னிலும், ராஸ் டெய்லர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், நியூசிலாந்து அணி 114 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்துள்ளது.

240 பந்துகளை சந்தித்த டேவன் கான்வே 136 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக நிக்கோல்ஸ் 149 பந்துகளில் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து