முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று அச்சம் காரணமாக 10 ஆயிரம் ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகல்

வியாழக்கிழமை, 3 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ : கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. 

இந்நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் தன்னார்வலர்கள் விலகி உள்ளனர். அவர்கள் விலகியதற்கு கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர். 

கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியளித்துள்ளன. எனினும், பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா என்று தெரியவில்லை. 

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதும், பல தன்னார்வலர்கள் விலகியதற்கு மற்றொரு காரணம் என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து