முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் மெட்வதேவ் 3-வது சுற்றுக்கு தகுதி

வியாழக்கிழமை, 3 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரீஸ் : கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது.

23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-வது வரிசையில் இருப்பவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியாவை சேர்ந்த பூசன்நெசுவை எதிர்கொண்டார்.

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 3 முறை வென்ற செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால் 2-வது செட்டில் பூசன் நெசு 7-5 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் செரீனா சுதாரித்து ஆடி 6-1 என்ற கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 5-7, 6-1.

மற்றொரு ஆட்டத்தில் 3-வது இடத்தில் உள்ள அர்யானா ‌ஷபலேன்கா (பெலாரஸ்) 7-5, 6-3 என்ற கணக்கில் சக நாட்டை சேர்ந்த சாஸ்லோவிச்சை தோற்கடித்தார்.

15-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), 23-வது இடத்தில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷ்யா), டோமிபவுலை (அமெரிக்கா) எதிர்கொண்டார். இதில் மெட்வதேவ் 3-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

5-ம் நிலை வீரரான சிட்சி பாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த பெட்ரோ மார்ட்டீனசை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் 12-வது வரிசையில் உள்ள பஸ்டா (ஸ்பெயின்), இஸ்னெர் (அமெரிக்கா), பாக்னி (இத்தாலி), பாடிஸ்கா அகுக் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து