முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் மாதிரி வாடகை சட்டம்: தமிழகத்தில் அமல்படுத்துவதில் சிக்கல்: அதிகாரிகள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள, மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுதும் வீடுகள் வாடகைக்கு விடுவதை முறைப்படுத்த, மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கைளை துவக்கியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில், நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் -- 2017 நிறைவேற்றப் பட்டது.  இந்த சட்டம், பல்வேறு திருத்தங்களுக்கு பின், 2019 பிப்ரவரி மாதம் 22-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக, 32 மாவட்டங்களில், வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்காக, 32 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பின்னணியில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள, மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, நேரடியாக அமல்படுத்த வேண்டியது அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து வீட்டு வசதித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள சட்டம் புதியது தான். தற்போது வரும் மாதிரி சட்டத்தை, புதிதாக அமல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தேவையான கூடுதல் பிரிவுகளை சேர்ப்பது குறித்து, தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்கும். வீட்டை வாடகைக்கு விடுவதை வணிகமாக்கும் நடவடிக்கைகள், தமிழகத்துக்கு பொருந்துமா என்பது தெரியவில்லை. இதனால், வீட்டு உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் சிக்கல் ஏற்படும். இது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து