முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. 

சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மன்னார்வளைகுடா, மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், கேரளா கடலோரப்பகுதி, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் முன்னேறி உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து