முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம்: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வரும் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடரிலிருந்து மக்களை காக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  கொரோனா பரவல் அதிகரிப்பால் மாஸ்க், சானிடைசர், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலை பயன்படுத்தி கொண்டு கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பன்மடங்கு அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான விலையையும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ. 3, மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க்கின் அதிகபட்ச விலை ரூ. 4.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கிருமிநாசினி 200 மி.லி - ரூ.110,  N95 முகக் கவசம் - ரூ.22,  கையுறை - ரூ.15,  ஆக்சிஜன் மாஸ்க் - ரூ.54,  பிபிஇ கிட் உடை - ரூ.273,  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரிபார்க்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் - ரூ. 1,500,  ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து