முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படவில்லை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அவர், 

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு தகவல் வந்தாலும், அதனை சேர்த்து தினசரி கொரோனா உயிரிழப்புகளின் கணக்கில் காட்டப்படுவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் இந்த தகவல்கள் அனைத்து ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வருவதாகவும், சில மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையை வழங்க தாமதம் ஏற்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து