World-Health 2021 04 28

Source: provided

ஜெனிவா : ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நிருபர்களிடம் கூறியதாவது:-

6 வாரங்களாக உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  நான்கு வாரங்களாக இறப்பு எண்ணிக்கையும் சரிந்துள்ளது. தடுப்பூசி போடும் பணிகளில், உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது.  மேற்கத்திய நாடுகளில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி வழங்க அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் முன் வரவேண்டும் . உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால் மட்டுமே, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலை குறைக்க முடியும். என கூறினார்.

அமெரிக்காவில் தேவைக்கு அதிகம் உள்ள 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோபைடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து