முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நாளை கூடுகிறது : ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நாளை 12-ம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெறுகிறது. 

இதில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்களுக்கான சிகிச்சைக்கு தேவையான பொருள்களுக்கு வரி விலக்கு குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர்.  இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கவுள்ளார். 

கடந்த மே மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய பொருள்கள், பி.பி.இ. கிட், முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சிலில் உள்ள மாநிலங்களின் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து