முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தொடா்ந்து 3-வது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் &94,052 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தொடா்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது. 

கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கைத் தொடா்ந்து கணிசமாக சரிந்து, 11,67,952 -ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 10-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 6148 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 3,59,676 போ் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 19 -ம் தேதி 4552 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச தினசரி உயிரிழப்பாக இதுவரை இருந்து வந்தது. 

தொடா்ந்து 28-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,51,367 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள்.  இதுவரை மொத்தம் 2,76,55,493 போ் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனா்.

இதன்படி மொத்த பாதிப்பில் குணமடைந்தவா்கள் 94.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்று  காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,04,690 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,21,98,253 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23,90,58,360 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து