முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்தின் உடல்நிலை சீரியஸ்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்தின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கடந்த 3-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினமே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவ குழுவினர் தலைமையில் பூங்கா டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கவிதா, புவனா ஆகிய 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அந்த 2 சிங்கங்களையும் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்றும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.  

இந்த நிலையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பெண் சிங்கங்களின் நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளன. இதற்கிடையே தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிங்கத்தின் உடல்நிலையும் மோசமானதாக தெரிகிறது. அதனை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  கவிதா என்ற வயதான சிங்கத்தை தவிர மற்ற சிங்கங்கள் வழக்கமான உணவை சாப்பிடுவதாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து