Modi 2020 12 14

Source: provided

மும்பை : மும்பையில் கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

மராட்டிய மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் முதல்கட்டமாக 9 பேர் உயிரிழந்தனர். தற்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால், குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கும் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மராட்டிய அமைச்சர் அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் மும்பை குடியிருப்பு கட்டிடம் இடிந்து இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் கருணை தொகையாக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து