முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில் அணி தொடர்ந்து 6-வது வெற்றி

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அசன்சியான் : உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. 

இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5-வது இடத்தை பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் மோத வேண்டி இருக்கும்.

இந்த நிலையில் தகுதி சுற்றில் கடந்த செவ்வாயன்று இரவு அசன்சியான் நகரில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில், உள்ளூர் அணியான பராகுவேயை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்திலேயே பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் அருமையாக கோல் அடித்து அசத்தினார். அவரது 66-வது சர்வதேச கோல் இதுவாகும். பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவரான பீலேவின் சாதனையை முறியடிக்க நெய்மாருக்கு இன்னும் 12 கோல் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 90-வது நிமிடத்தில் பிரேசில் மாற்று ஆட்டக்காரர் லுகாஸ் பகெட்டா கோல் போட்டார்.முடிவில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்தது. இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள பிரேசில் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அர்ஜென்டினா-கொலம்பியா (2-2),வெனிசுலா-உருகுவே (0-0),சிலி-பொலிவியா (1-1) ஆகிய அணிகள் மோதிய ஆட்டங்கள் ‘டிரா’ வில் முடிந்தன. அடுத்த தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 2-ம் தேதி நடக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து