முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஸி நடிகரான தமன்குமார்

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின்  'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் ரீமேக்கின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார்.  தற்போது சன் டிவியில் 'வானத்தை போல' சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக பட்டிதொட்டியெல்லாம் ரொம்பவே பிரபலமான நட்சத்திரம் ஆகிவிட்டார். ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வெற்றிகரமாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருகிறார் தமன்குமார். இது பற்றி தமன் குமார் கூறுகையில், ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்..

இன்னொரு பக்கம் சன் டிவியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து நான் நடித்துவரும் வானத்தை போல சீரியல், நூறாவது எபிசோடை தாண்டி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. சினிமாவை எடுத்துகொண்டால் நான் நடித்துள்ள கண்மணி பாப்பா ஹாரர் படமாக உருவாகியுள்ளது. ஒரு சிறுமியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் நடிகர் கொட்டாச்சியின் மகள் பேபி மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து